ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை; 200 பேர் கைது
திருவாரூர் அருகே கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 25 பள்ளி மாணவர்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின்போது ஒரு மாணவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர், விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாக ஆழ்குழாய் அமைக்கும் பணியினை தொடங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், மக்களை பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அருகே கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுக்கும் இடத்தினை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முரளி ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடம்பங்குடி, தோப்புத்தெரு, கமலாபுரம், குளிக்கரை, கீரக்கோட்டகம், கீழப்புலியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயத்தையும், குடிநீரையும் பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனைத்தை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கடம்பங்குடியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், தாசில்தார் ராஜன்பாபு மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 25 மாணவர்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின்போது 9-ம் வகுப்பு மாணவன் சச்சின் திடீரென மயங்கி விழுந்ததால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story