மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி

வரதராஜன்பேட்டை,
ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் தனது மனைவி ஜோதி, மகள் சினேகா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வரதராஜன்பேட்டைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செங்கமேடு அருகே வந்த போது, வரதராஜன்பேட்டையை சேர்ந்த ஜெஸ்டின் அடைக்கலராஜ் (27) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து ஜெஸ்டின் அடைக்கலராஜ், ராஜா, அவரது மனைவி ஜோதி, மகள் சினேகா ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெஸ்டின் அடைக்கலராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ராஜா, ஜோதி, சினேகா ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜா உள்பட 3 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெஸ்டின் அடைக்கலராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story