2-வது திருமணம் செய்த வாலிபர் கைது


2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவருடைய மனைவி மகாலட்சுமி (28). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் மகாலட்சுமி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவிக்கு குழந்தை பிறந்த பிறகும் கூட வந்து வேல்முருகன் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த மகாலட்சுமி தனது குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கு வேறொரு பெண்ணை வேல்முருகன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கடலூர் மாவட்டம் கந்தப்பன் குறிச்சியை சேர்ந்த சின்னதுரை, ராஜ்குமார், ரேவதி, சந்தியா (2-வது மனைவி) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story