ஜல்லிக்கட்டில் 550 காளைகள் களம் இறங்கின வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்; 27 பேர் காயம்
திருச்சி அருகே கூத்தைப்பாரில் நடந்த ஜல்லிக்கட்டில் 550 காளைகள் களம் இறங்கின. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள். இதில் 27 பேர் காயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,
திருச்சி அருகே கூத்தைப்பாரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. பாரம்பரியமிக்க கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் சிவன் கோவில் வாசலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்திட கூத்தைப்பார் கிராம கமிட்டியினர் கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்றனர். பின்னர் வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதியின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை உதவி கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாலையிலேயே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.
இவைகளுக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் துணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், எஸ்தர் ஷீலா உள்ளிட்ட 30 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். காளைகளுக்கு ஒரு புறம் மருத்துவ பரிசோதனை நடை பெற்றதை போல் இன்னொரு பகுதியில் காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சுகுமார், அரசங்குடி நீலவேணி உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கியக் குழு மொத்தம் 272 வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்ததில் 2 பேர் மது அருந்தி இருந்ததாலும், 2 பேர் உடல் எடை குறைவாக இருந்ததாலும், 6 பேருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாலும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த 10 பேரை தவிர மீதி உள்ள 262 பேர் காளைகளை அடக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்குவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு காலை 8 மணியளவில் தொடங்கியது. திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஷோபா ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
முதலில் கோவில் காளைக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. கூத்தைப்பார் உள்ளிட்ட விசங்கநாட்டை சேர்ந்த கோவில் காளைகள் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை அடக்க யாரும் முற்படவில்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக காளையின் உரிமையாளர் பெயரை கூறி இதனை அடக்கினால் தங்ககாசு உள்ளிட்ட வழங்கப்படும் பரிசு பொருட்கள் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கொண்டே இருந்தனர். இதனால் மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை சூழ்ந்து கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை கட்டிப்பிடித்தும் அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் மாடுபிடி வீரர்களை அனாயசமாக அந்தரத்தில் தூக்கி வீசி எல்லைக் கோட்டை தாண்டி ஓடி வெற்றி பெற்று தன் உரிமையாளருக்கு பரிசினை பெற்று தந்தன.
இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் துவாக்குடி ராஜா (வயது 29), கூத்தைப்பார் சுரேஷ் (22), திருச்சி முதலியார் சத்திரத்தை சேர்ந்த அமல்தாஸ் (33) ஆகிய 3 பேரும், ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த சேகர் (25) என்பவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் காளையின் உரிமையாளர்களான அரியமங்கலம் முத்து இருளாண்டி (31), வேங்கூர் இளங்கோ (17), நவல்பட்டு பாலுசாமி (64), முத்துவேல் (40), வேடிக்கை பார்த்த கூத்தைப்பார் மகேந்திரன், புதுக்கோட்டை குளத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் (29) உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.இதையடுத்து அவர்களுக்கு அங்கு அமைக்க பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தத்தில் 27 பேர் காயம் அடைந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் அரை கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. காளை வெற்றி பெற்றால் காளையின் உரிமையாளருக்கும், காளையை அடக்கினால் அடக்கிய வீரருக்கும் தங்ககாசு வழங்கப்பட்டது. இது தவிர ஓடாமல் நின்று விளையாடிய காளைகளுக்கு தங்க காசுடன் மின் விசிறியும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு பீரோவும், 2-ம் இடம் பிடித்தவருக்கு சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு தொடங்கி கோவில் மாடு, உள்ளூர் மாடு என 90 காளைகளும், தொடர்ந்து வெளியூர் காளைகள் 460 வரை அவிழ்த்து விட்ட நிலையில் நேரம் இல்லாத காரணத்தால் மதியம் 2.45 மணிக்கு ஜல்லிக்கட்டை முடித்து கொள்வதாக தாசில்தார் அறிவித்ததை தொடர்ந்து மொத்தம் 550 காளைகளுடன் ஜல்லிக்கட்டு முடிவுக்கு வந்தது. வெளியூரிலிருந்து வந்திருந்த 150 காளைகள் அவிழ்த்து விடபடாமல் ஏமாற்றத்துடன் திரும்பின. ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணியில் டி.ஐ.ஜி.பவானீஸ்வரி உத்தரவுபடி ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் , 32 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 240 போலீசார் ஈடுப்பட்டு இருந்தனர்.

Related Tags :
Next Story