பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- தோழமை கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- தோழமை கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்து கொண்டார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திலகர் திடலில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன், நகர செயலாளர் நைனாமுகமது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை கனல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செங்கோடன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story