காதலர் தினத்தில் பரபரப்பு: காதலனுடன் 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
காதலர் தினத்தில் காதலனுடன் 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினார்கள்.
நெல்லை,

17 வயது இளம்பெண்
நெல்லை அருகே உள்ள கட்டுடையார்குடியிருப்பை சேர்ந்தவர் சங்கரன். அவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. காதல்ஜோடி இருவரும் யாருக்கும் தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு மணிகண்டனின் பெற்றோர் மற்றும் இளம்பெண்ணின் தாத்தா, பாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும், அந்த இளம்பெண் தனது காதலை கைவிடாமல் மணிகண்டனை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்து உள்ளார். மணிகண்டனும் தனது காதலியை எப்படியாவது கரம் பிடித்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தார்.
திருமணத்துக்கு ஏற்பாடு
இதனால் இவர்கள் இருவரின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து காதல்ஜோடியின் திருமணம் காதலர் தினமான நேற்று கட்டுடையார்குடியிருப்பில் உள்ள மணிகண்டன் வீட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. நீண்டநாள் காதல் கைகூடியதால் திருமண கனவுகளுடன் மணிகண்டனும், அந்த இளம்பெண்ணும் குறித்த நேரத்தில் மணமக்கள் கோலத்தில் மணமேடைக்கு வந்தனர்.
இதற்கிடையே, 17 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, ஆனந்தகுமார், கிராம நிர்வாக அதிகாரி சீதாலட்சமி, தலையாரி ஜேசுராஜ் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணிகண்டன் அந்த இளம்பெண்ணுக்கு தாலி கட்டும் நேரத்தில் குறுக்கிட்ட போலீசார், மணமகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை. எனவே, இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே, திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறினார்கள். மேலும் மணப்பெண்ணின் வயது சான்றை சரிபார்த்த அவர்கள் மணமக்களின் வீட்டாரிடம், 18 வயது பூர்த்தியாகும் வரை இவர்களுக்கு திருமணம் செய்யமாட்டோம். அதையும் மீறி திருமணம் செய்தால் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்று எழுதி வாங்கிக்கொண்டனர்.
இதனால் தங்கள் காதல் திருமணம் கனவாகி போனதே என்று காதல்ஜோடி இருவரும் ஏமாற்றம் அடைந்தனர். உறவினர்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் காதலர் தினத்தில் காதலனுடன் 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story