கம்பம் மலையடிவார பகுதியில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கம்பம் மலையடிவார பகுதியில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்
கம்பம் நகரின் மேற்கு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு மற்றும் தட்டை, பாசிப்பயறு உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழை வளம் குறைந்துவிட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏகலூத்து ரோடு, கம்பம்மெட்டு ரோடு, புதுக்குளம் ரோடு, மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி குறைந்துவிட்டது.
சில விவசாயிகள் கொட்டை முந்திரி பயிரிட்டுள்ளனர். சிலர் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். நிலங்களை தரிசாக வைத்துள்ள விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்து மண்ணை அள்ள ஆரம்பித்தனர். 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டு, 20 அடி ஆழம் வரை மண் அள்ளப்பட்டு வருகிறது. மேலும், பலர் அனுமதி பெறாமல், விவசாயிகளிடம் நிலங்களை குத்தகைக்கு பேசி, கரம்பை மற்றும் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளின் உதவியுடன் 20 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண்ணை அள்ளுகின்றனர்.
இதன் காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர்வு, புவிவெப்பமயமாதல், நிலநடுக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அனுமதியின்றி அதிக அளவு மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story