‘மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை’ முத்தரசன் குற்றச்சாட்டு
மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி பேசினார்.
விழுப்புரம்
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், உதயசூரியன், மாசிலாமணி, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசியதாவது:-
போக்குவரத்துத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறை. பஸ் சேவையில் லாபம் பார்க்கக்கூடாது. நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கூறி வருவது போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையோ என்ற சந்தேகம் எழுகிறது. தனியார் பஸ்களுக்கு பின்னால் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் வருவாய் குறைகிறது. இதனை அரசு மாற்ற முடியும். ஆனால் செய்வதில்லை. 55 சதவீதம் வரை பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள், மாணவர்கள், மக்கள் ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று பஸ் கட்டணத்தை குறைத்ததாக சொல்கிறார்கள். சாதாரண பஸ்களில் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பஸ்களில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும் குறைத்துள்ளனர். ரூபாய் கணக்கில் கட்டணத்தை உயர்த்தி விட்டு பைசா கணக்கில் குறைப்பது எந்த விதத்தில் நியாயம். இது சரியல்ல. உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்த அரசு. இதற்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது மோடி அரசு. இதனை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க. மெல்ல, மெல்ல காலூன்ற பார்க்கிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க.வினால் அது முடியாது. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை. பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அநியாயமான ஆட்சிக்கு எதிரான யுத்தத்தை நாங்களும் தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story