பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கலைஞர் அறிவாலயத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் 10 பைசா கூட பஸ் கட்டணத்தை உயர்த்த வில்லை. தி.மு.க. ஆட்சியில் தான் ரூ.20 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த 10 ஆண்டு காலத்தில் 6 ஆயிரம் பஸ்கள் தான் வாங்கப்பட்டன.
பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி. 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் ரத்து என்றால் ஒரு நிலை, 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லும் என்றால் அதற்கு ஒரு நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. எந்த நிலை வந்தாலும் அதை தி.மு.க. திறம்பட செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story