ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி கோவையில் சமூகநீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி கோவையில் சமூகநீதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை,
காதலர் தினமான நேற்று கோவை வ.உ.சி. பூங்காவில் நேற்று காலை முதல் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். மேலும் காதலை வெளிப்படுத்தும் விதமாக தங்களது ஜோடிக்கு ரோஜா பூ, வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தையொட்டி கோவையில் நேற்று ரோஜா பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. சிவப்பு நிற ரோஜா ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் மஞ்சள் நிற ரோஜா ஒன்று ரூ.12 முதல் ரூ.15 வரையும் விற்கப்பட்டது. கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் நேற்று ஏராளமான காதல்ஜோடிகள் காணப்பட்டனர்.
காதலர் தினத்தை கொண்டாட ஒரு சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை வ.உ.சி. பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர காதலர் தின வாழ்த்து என்ற பெயரில் இளைஞர்கள் யாரும் இளம்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா? என்பதை சீருடை அணியாத போலீசாரும் கண்காணித் தனர்.
காதலர் தினத்துக்கு வரவேற்பு தெரிவித்தும், ஆணவக்கொலைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றக்கோரியும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூகநீதி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கி பேசும்போது, தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்கள் ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள். எனவே இதற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்ற வேண்டும். மேலும் சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து, சாதி மறுப்பு திருமணங்கள் செய்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு, காதலர் தினத்தை வரவேற்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story