வேடசந்தூர் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்மச்சாவு
வேடசந்தூர் அருகே, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் எரியோடு அருகே தண்ணீர்பந்தம்பட்டி என்னுமிடத்தில் உள்ளது.
அந்த தோட்டத்தில், தென்னை மரங்கள் உள்ளன. மேலும் அங்குள்ள வயல்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு செல்வதாக கூறி அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். நேற்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவருடைய செல்போனில் உறவினர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர், போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தோட்டத்துக்கு நேற்று இரவு சென்று பார்த்தனர்.
அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு அறையில், மர்மமான முறையில் ஆண்டிவேல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மல்லாந்த நிலையில் கிடந்த அவருடைய முகத்தின் நாடி பகுதியில் லேசான காயம் இருந்தது. இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஆண்டிவேல் பிணமாக கிடந்த அறையில் உள்ள மேஜையில் அவருடைய சட்டை மற்றும் கைக்கெடிகாரம் இருந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ஆண்டிவேலுடைய உடலில் எந்தவித வெட்டுக்காயங்கள் இல்லை. அவருடைய நாடி பகுதியில் லேசான காயம் மட்டுமே உள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தமும் வடியவில்லை. எனவே அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.
இறந்த ஆண்டிவேலுவுக்கு ஆண்டாள் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்மமான முறையில் இறந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story