சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் கடைகளில் பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் வணிகர்கள் மனு
சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் கடைகளில் பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விழுப்புரம் வணிகர்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் தலைவர் மகாலட்சுமி கே.ஜே.ரமேஷ், பொருளாளர் கலைமணி, துணைத்தலைவர்கள் முபாரக்அலி, குபேரன் மற்றும் வணிகர்கள் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் பொருட்களை இறக்குவது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வணிகர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனுதாக்கல் செய்துள்ள காரணத்தினால் தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி பொருட் களை இறக்கி கொள்வது என பேசி முடிவு செய்து அதன் அடிப்படையில் தொடர்ந்து பொருட்கள் இறக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கூலி பிரச்சினை என்று கூறி 2 நாட்களாக சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொருட்களை இறக்காமல் எங்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.
இதனால் கடை களுக்கு வந்த பொருட்கள் இறக்கப் படாமல் வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே எங்களின் நலனை காக்கும் வகையில் கடை களுக்கு வரும் பொருட் களை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலி பிரச்சினை குறித்து சுமூகமாக பேசி முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந் தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Tags :
Next Story