பி.இ.எம்.எல். நிறுவனம் தயாரித்த 3 புதிய மெட்ரோ ரெயில் பெட்டிகள் அரசிடம் ஒப்படைப்பு
பெங்களூருவில் நடந்த விழாவில், பி.இ.எம்.எல். நிறுவனம் புதிதாக தயாரித்த 3 புதிய மெட்ரோ ரெயில் பெட்டிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரு,

3½ லட்சம் பேர் பயணம்
பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் ஓடுகிறது. பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரெயிலில் தினமும் 3½ லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். தற்போது மெட்ரோ ரெயில்கள் 3 பெட்டிகளுடன் இயங்குகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயிலில் கடுமையான கூட்டநெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று கர்நாடக அரசு கூறியது. ஆனால் அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. மெட்ரோ ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை தயாரிக்கும் பணியை பி.இ.எம்.எல். நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஒப்படைக்கும் விழா
அந்த நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள 3 மெட்ரோ ரெயில் பெட்டிகளை பெங்களூரு மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்திடம் ஒப்படைக்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மத்திய மந்திரி அனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பி.இ.எம்.எல். நிறுவனம் புதிய ரெயில் பெட்டிகளை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதில் மத்திய மந்திரி அனந்தகுமார் பேசியதாவது:-
பி.இ.எம்.எல். நிறுவனத்தில் உலக தரத்தில் மெட்ரோ ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் நாட்டில் அனைத்து மெட்ரோ ரெயில் நிறுவனங்களும் இங்கு பெட்டிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு சிபாரிசு செய்யும். ராணுவ மந்திரி மற்றும் ரெயில்வே மந்திரிகளை இங்கு அழைத்து வந்து ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவது காட்டப்படும். இங்கு உலக தரத்தில் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு தேவையான பெட்டிகள் பி.இ.எம்.எல். நிறுவனத்திலேயே கொள்முதல் செய்யுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைப்பேன்.
இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.
சாக்கடை நீர் சுத்திகரிப்பு
இதைதொடர்ந்து மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:-
42 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் ஓடுகிறது. இந்த திட்டத்தில் கெங்கேரி மற்றும் ஒயிட்பீல்டு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செயல்படுத்தப்படும் புறநகர் ரெயில் திட்ட செலவில் மாநில அரசின் பங்கு 50 சதவீதம் ஆகும். இது மட்டுமின்றி நிலத்தை கையகப்படுத்த தேவையான செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். பெங்களூருவில் உள்ள ஏரிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்து ஏரிகளில் விடப்படுகிறது. அதனால் ஏரிகளின் தூய்மைத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
கூடுதலாக 3 பெட்டிகளை...
பெங்களூருவில் தற்போது 3 பெட்டிகளுடன் 50 மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன. இந்த ரெயில்களில் கூடுதலாக தலா 3 பெட்டிகளை இணைக்க தேவையான ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்குமாறு பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 பெட்டிகள் நேற்று பெங்களூரு மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள பெட்டிகள் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தயாரித்து வழங்கப்படும் என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் பி.சி.மோகன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story