ரூ.2 ஆயிரத்து 610 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
விக்கிரவாண்டி-தஞ்சை இடையே ரூ.2 ஆயிரத்து 610 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதில் 5 இடங்களில் புறவழிச்சாலை அமைகிறது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பனந்தாள்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயான 164.275 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது.
இதற்கான நிலம் வருவாய்துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் திட்ட இயக்குனர் தலைமையில் தொழில் நுட்ப மேலாளர்கள் முன்னிலையில் பணிகள் நடை பெறுகிறது.
இந்த நான்கு வழிச்சாலை பணிகள் ரூ.2 ஆயிரத்து 610 கோடி மதிப்பில் பணிகள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி முதல் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு வரையிலான 65.960 கிலோ மீட்டர் சாலை பணிகளை ஒரு தனியார் நிறுவனமும், சேத்தியாதோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 98.315 கிலோ மீட்டர் சாலையை மற்றொரு தனியார் நிறுவனமும் டெண்டர் எடுத்து பணிகளை தொடங்கி உள்ளது.
இதில் பின்னலூர், மெரலூர், சேத்தியாத்தோப்பு, அணைவாரி, வீரமுடியாநத்தம் வழியாக குமரகுடி வரை 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு புறவழிச்சாலையும், அணைக்கரை வேம்புக்குடி, உதயநத்தம், உக்கரை வழியாக 5.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு புறவழிச்சாலையும், திருப்பனந்தாள் குறுக்கு பாலம் முதல் துணை மின் நிலையம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு புறவழிச்சாலையும்
சோழபுரம் மானம்பாடி முதல் விளந்தகண்டம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு புறவழிச்சாலையும், தாராசுரம் அம்மாப்பேட்டை முதல் மனக்கரம்பை வரை 29.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு புறவழிச் சாலையும் என மொத்தம் 5 இடங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படுகிறது.
அணைக்கரை கீழணை கொள்ளிட பாலம் வேம்புக்குடி முதல் உக்கரை வரை 860 மீட்டர் தூரத்திற்கு நீண்ட பாலமாக இணைக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக சோழபுரம் மானம்பாடி இடையேயான விளந்த கண்டம் பகுதியில் பொக்லின் எந்திரங்கள் மூலம் முள்செடிகள், புதர்களை அப்புறப்படுத்தி நிலங்களை சமப்படுத்தி, சாலைகளை தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்த நான்கு வழிச்சாலை 60 மீட்டர் அகலத்தில் சுமார் 180 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த நான்கு வழிச்சாலை பணிகள் இரண்டு வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நான்கு வழிச்சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகள்(டோல்கேட்) அமைக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story