குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு


குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டம் அருகே குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் அசோக் (வயது 27). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவரும், சின்னமுட்டத்தை சேர்ந்த திரேசா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திரேசா கணவரிடம் கோபித்துக்கொண்டு சின்னமுட்டத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்து விட்டார்.

மனைவி மீது தாக்குதல்

இந்தநிலையில் அசோக் சின்னமுட்டம் சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். அதற்கு திரேசா வர மறுத்ததால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் அசோக், மனைவி திரேசாவை தாக்கி உள்ளார். இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story