பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்


பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:30 AM IST (Updated: 15 Feb 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பெங்களூரு,

பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ

பெங்களூரு புறநகர் நெலமங்களா தாலுகா டாபஸ் பேட்டை டவுனில் நவீன் என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தொழிற்சாலையில் வேலை செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென அங்கிருந்து பொருட்களில் பரவி எரிந்தது. மேலும் தொழிற்சாலையில் இருந்து கரும்புகையும் வெளியேறியது.

இதை பார்த்த காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு முதலில் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ரசாயன பொருட்கள் தீப்பிடித்ததால், அதனை உடனடியாக அணைக்க முடியாமல் போனது. மேலும் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி எரிந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

பல கோடி ரூபாய் மதிப்பு

பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் 3 மணிநேரத்திற்கும் மேலாக போராடி ரசாயன தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைத்தார்கள். ஆனாலும் அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீப்பிடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அதிகாலையில் தீ விபத்து நடந்ததாலும், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு யாரும் வேலை செய்யாத காரணத்தாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இதுகுறித்து டாபஸ் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story