சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிறைவு 75 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்


சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிறைவு 75 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிறைவு பெற்றது. 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

சென்னை,

பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் மகா சிவராத்திரியையொட்டி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் கிருஷ்ணேஷ்வர், கேதார்நாத், திரியம்பகேஸ்வரர், விஷ்வநாத், நாகேஸ்வரர், ராமேஸ்வரம், பீமாசங்கர், வைத்யநாத், ஒங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வர், மல்லிகார்ஜூன், சோமநாத் ஆகிய 12 ஜோதிர்லிங்கங்கள் தத்துருவமாக வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டிருந்தது.

பரவசத்துடன் தரிசனம்

அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை கடந்த 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து தினமும் ஏராளமான பேர் பார்வையிட்டு சென்றனர். கடைசிநாளான நேற்று கூட்டம் அதிகம் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்கத்தை பொதுமக்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

75 ஆயிரம் பேர்

இதுகுறித்து பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்ய வித்யாலயம் அமைப்பாளர்கள் கூறியதாவது:-

மாணவர்கள், இளம்பெண்கள், முதியோர்கள், பிரபலங்கள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்கம் தரிசனத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பெண்களுக்கு விளக்கு தியானம், திருநங்கைகளுக்கு சிறப்பு தியான பயிற்சி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் பயிற்சி, தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள், அர்ச்சகர்கள், ஆன்மிகவாதிகள், ஊடகம் மற்றும் கலைத்துறையினர், வியாபாரிகளுக்கும் தனியாக தியான பயிற்சிகள் நடத்தப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story