கோவிலில் மதுகுடித்ததை தட்டிக் கேட்ட தச்சு தொழிலாளி கத்தியால் குத்தி கொலை
ஏத்தாப்பூர் அருகே கோவிலில் வைத்து மது குடித்ததை தட்டிக் கேட்ட தச்சு தொழிலாளியை அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
வாழப்பாடி,
ஏத்தாப்பூர் அருகே உள்ள தும்பல் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 48), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ஜானகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வன்னியர் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(30). இவரது தம்பி இளைய அரசன்(28). லாரி டிரைவர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு அய்யம்பேட்டை அரசமரத்து பிள்ளையார் கோவிலில் வைத்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாலசுப்பிரமணியன் இதை பார்த்து அவர்களிடம் சென்று கோவில் முன்பு வைத்து ஏன் மது குடிக்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், இளைய அரசன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசுப்பிரமணியனை குத்தியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அங்கு ஓடி வந்த பாலசுப்பிரமணியத்தின் உறவினர் நடராஜனையும் அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்தநிலையில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏத்தாப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் படுகாயம் அடைந்த நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாலசுப்பிரமணியனை கொலை செய்த இளைய அரசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவருடைய அண்ணன் சிலம்பரசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story