விபத்தில் பலியான அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.39¼ லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு


விபத்தில் பலியான அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.39¼ லட்சம் இழப்பீடு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2018 3:45 AM IST (Updated: 16 Feb 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பலியான அரசு பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.39¼ லட்சம் வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா வீராக்கன் கிராமம் அருகே உள்ள கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜன்(வயது 55). இவர், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 29.8.2016 அன்று காலையில் இவர் பணிக்கு செல்வதற்காக அன்புராஜன் ஜெயங்கொண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பகுதியில் உள்ள சம்போடை கிராமம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார், அன்புராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்புராஜன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரூ.39¼ லட்சம் இழப்பீடு

இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இழப்பீடு கோரி அன்புராஜன் மனைவி பழனியம்மாள், தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், விபத்தில் பலியான அரசு பஸ் கண்டக்டர் அன்புராஜன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.39 லட்சத்து 31 ஆயிரத்து 264 வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவன திருச்சி கிளை மேலாளருக்கு உத்தர விட்டார். 

Next Story