கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2018 2:30 AM IST (Updated: 16 Feb 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

உதவியாளர் பணி


தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 30 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 1.7.2015 அன்றைய தேதிப்படி 18 வயதாகும். அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 வயதாகும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆகும்.

விண்ணப்பம்


இந்த பணிக்கான விண்ணப்பத்தை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ பெருமனை வளாகம், தூத்துக்குடி– 628003 என்ற முகவரிக்கு வருகிற 1.3.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

அதன்பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணலில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் மாவட்ட அளவில் நடைபெறும்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story