தூத்துக்குடியில் சத்துணவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் 330 பேர் கைது


தூத்துக்குடியில் சத்துணவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் 330 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 330 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 330 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்சேகர், பொருளாளர் ஆண்டிச்சாமி, அரசு ஊழியர் சங்க மாட்ட செயலாளர் வெங்கடேசன், நிலஅளவைத்துறை ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தை அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சத்துணவு பணியாளர்கள் அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து காய்கனி மார்க்கெட் வரை பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒட்டு மொத்த ஓய்வூதிய தொகையை ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும், அரசு காலிப்பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 330 பேரை கைது செய்தனர்.

Next Story