சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2018 4:00 AM IST (Updated: 16 Feb 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகராட்சி பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் நகராட்சியில் பல இடங்களில் சாலைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையான பெரம்பலூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் அதன் வழியாக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நன்றாக இருந்த பெரியார் நகர், மேல அக்ரகாரம், விளாங்குடி தெரு, செல்லமுத்து நாயக்கர் தெரு, எத்துராஜ் நகர், ராஜாஜி நகர், சந்தன மாதா கோவில் தெரு மற்றும் கீரைக்கார தெரு சாலைகள் பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கற்கள் கொட் டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கார் கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின் றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலை போடப் படாமல் ஜல்லிக்கற்கள் கொட் டப்பட்டு உள்ளதால் அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்சு செல்ல முடி யாமல் கால தாமதம் ஆகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடிவ தில்லை. இதனால் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின் றனர். எனவே அரியலூர் நகராட்சி பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடித்து உடனடியாக தார்ச்சாலை போட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story