பாளையங்கோட்டையில் சமூக விழிப்புணர்வு நாடகங்களை மாணவிகள் நடித்து காட்டினர்
பாளையங்கோட்டையில் சமூக விழிப்புணர்வு நாடகங்களை மாணவிகள் நடித்து காட்டினார்கள்.
நெல்லை,

சமூக விழிப்புணர்வு
பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள், நெல்லை புறநகர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பொதுமக்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சமூக பிரச்சினை குறித்து நடித்து காட்டினர். அதற்கான தீர்வுகளையும் காட்சிபடுத்தினர்.
மாணவிகள் 5 குழுக்களாக பிரிந்து ஆண் வேடம் அணிந்து நடித்து காட்டினர். தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் கலப்புத்திருமண விளைவுகள், ஆசிரியர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாலைவிபத்துகளும், தடுப்பு முறைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் விவசாயத்தின் இன்றைய நிலை ஆகிய தலைப்புகளில் மாணவிகள் நடித்து காட்டினர்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம் நாட்டின் பொருளாதாரம், தொழில் கல்வி, பண்பாடு, கலாசாரம் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறோம். ஆனால் இன்றைய இளையதலைமுறைகள் இணையதளம், வாட்ஸ்அப், முகநூல் ஆகியவைகளால் எப்படி அழிந்து வருகிறார்கள்? என்பதை மாணவிகள் நடித்து காட்டினர். கலப்பு திருமணம், மதமாற்ற திருமணங்களின் பின்விளைவுகள் பற்றி மாணவிகள் காட்சி படுத்தினர்.
ஆசிரியர்கள் வேலை தற்பொது ஒரு சவாலாக அமைத்துள்ளது. சமூகத்தில் ஆசிரியர்கள் படும் சிரமங்கள் பற்றி மாணவிகள் நடித்து காட்டினர்.
சாலை விபத்து
குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்களை தத்துரூபமாக மாணவிகள் விளக்கி காட்டினர். இரண்டு வாகனங்கள் மோதி, அதில் இருந்து ஒருவர் ரத்து வெள்ளத்துடன் வெளியே இறந்து கிடப்பது போல் நடத்து காட்டினர்.
செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவது, செல்பி மோகத்தில் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவிகள் விளக்கி காட்டினர்.
சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றியும், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மாணவிகள் நடித்து காட்டினார். கல்லூரிகளில் மாணவிகளுக்கு ராகிங்கால் ஏற்படும் பாதிப்பு பற்றி மாணவிகள் நடித்து காட்டினார்கள்.
மது குடிக்கும் பழக்கம்
மது குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மாணவிகள் காட்சிபடுத்தினர். குடிப்பழக்கத்தால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் நிலை பாதிக்கப்படுகிறது என்பது பற்றி மாணவிகள் நடித்து காட்டினர்.
தற்போது விவசாயத்தின் நிலை என்ன? பருவமழை பெய்துவிடுவதால் விவசாயிகள்படும் துயரங்கள் பற்றியும், விவசாயிகள் தற்கொலை செய்யும் முடிவை ஏன் எடுக்கிறார்கள். அவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும் நடித்து காட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி செயலாளர் மேக்தலின், கல்லூரி முதல்வர் நிர்மலாதேவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிளாடிஸ் ஸ்டெல்லாபாய், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் சார்லஸ்பிரேம் குமார், உறுப்பினர் நயினார் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story