குன்னூர் வனப்பகுதியில் 8 மணி நேரம் சுற்றித்திரிந்த காதலர்கள்


குன்னூர் வனப்பகுதியில் 8 மணி நேரம் சுற்றித்திரிந்த காதலர்கள்
x
தினத்தந்தி 16 Feb 2018 5:00 AM IST (Updated: 16 Feb 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

பாதை மாறி சென்றதால் குன்னூர் வனப்பகுதியில் 8 மணி நேரம் காதலர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை ஆதிவாசி மக்கள் மீட்டனர்.

குன்னூர்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தபாலத்தை சேர்ந்தவர்கள் பினு (வயது 23) மற்றும் சுகுமாரன் (23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ரேணுகா (20) மற்றும் திவ்யா (20). இவர்கள் 4 பேரும் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர். பினு, ரேணுகாவையும், சுகுமாரன் திவ்யாவையும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இரு காதல் ஜோடிகளும் 2 மோட்டார் சைக்கிளில் குன்னூர் வந்தனர். அவர்கள் குன்னூர் அருகேயுள்ள சுற்றுலா தலமான பக்காசூரன் மலைக்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வந்தனர். அங்குள்ள சுல்தான் கோட்டையை பார்த்து விட்டு இயற்கை காட்சிகளை கண்டு களிக்கும் விதமாக ஆர்வகோளாறில் கோட்டையை விட்டு மலை பகுதியில் இறங்கினர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்த காதலர்களால் மீண்டும் வந்த வழியே செல்ல மறந்து விட்டனர். வந்த வழியை தவற விட்ட அவர்கள் வனப் பகுதிக்குள் சுற்றி திரிந்தனர். 8 மணி நேரம் வனப்பகுதியில் சுற்றி திரிந்த அவர்கள் இரவு 7 மணியளவில் செங்கல் கோம்பை ஆதிவாசி கிராமத்தை அடைந்தனர். அங்குள்ள ஆதிவாசி மக்களிடம் தாங்கள் பாதை மாறி வந்ததை கூறினார்கள்.

பின்னர் ஆதிவாசி கிராம பிரமுகர் மணி, காதல் ஜோடிகளை அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்த பக்காசூரன் மலைக்கு அழைத்து வந்தார். அங்கு காதல் ஜோடிகள் தங்கள் மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் காதலர்கள் கண்கள் கலங்க ஆதிவாசி பிரமுகர் மணிக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். அதன்பிறகு காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிள்களில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story