வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள்


வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:15 AM IST (Updated: 16 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் பல்லலகுப்பம், குண்டலபல்லி, மோர்தானா, சேராங்கல் காப்புக்காடு ஆகிய வனப்பகுதியில் சிறுத்தைகள், காட்டுயானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

கோடைகாலம் தொடங்க இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க வனவிலங்குகளின் குடிநீர் தாகத்தை தீர்க்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகள் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் சுமார் 2½ அடி ஆழமுள்ள சிமெண்டு குடிநீர் தொட்டிகள் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு டிராக்டர்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று தொட்டியில் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனச்சரகர் மூர்த்தி தலைமையில் வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story