பாளையங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோவில் திருவிழாக்களில் போலீசார் கெடுபிடிக்கு கண்டனம்
கோவில் திருவிழாக்களில் போலீசார் கெடுபிடி செய்வதை கண்டித்து பாளையங்கோட்டையில் நேற்று பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,

போலீஸ் கெடுபிடி
பாரதீய ஜனதா கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட ஊடக பிரிவு சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் கோவில் கொடை விழாக்களில் நடைபெறும் சப்பர ஊர்வலம், இரவு நேர பூஜைகள், வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சமீப காலமாக போலீசார் கெடுபிடிகள் செய்கின்றனர். மேலும் கோவில் சாமியாடிகள், நிர்வாகிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இதை கண்டித்தும், கோவில் விழாக்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தியும், கோவில் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாமியாடிகள் வேஷம்
ஆர்ப்பாட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் டி.வி.சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, பாளையங்கோட்டை மண்டல தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோவில் விழாக்களை வழக்கம் போல் நடத்தவும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுடலை மாடசாமி கோவில் சாமியாடிகள் போல் 2 பேர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story