கர்நாடகத்தில் 6 நாள் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா ஆதிதிராவிடர் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்
கர்நாடகத்தில், 6 நாள் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா, ஆதிதிராவிடர் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
பெங்களூரு,

6 நாள் சுற்றுப்பயணம்
பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 19-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் அவர் தட்சிணகன்னடா மங்களூரு குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 20-ந் தேதி அவர் புத்தூரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பண்ட்வாலில் நடைபெறும் ‘நவசக்தி சமவேஷா‘ கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் காட்டிப்பல்லா பகுதியில் கொலையான பா.ஜனதா தொண்டர் தீபக் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறுகிறார்.
21-ந் தேதி உடுப்பியில் மீனவ பிரிவு மக்களுக்கான பேரணியை தொடங்கி வைத்து பேசும் அமித்ஷா, அதைத்தொடர்ந்து, உடுப்பி கிருஷ்ணர் மடம் மற்றும் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். இதையடுத்து, அவர் உத்தர கன்னடா மாவட்டத்துக்கு சென்று கொலையான பா.ஜனதா தொண்டர் பரேஸ் மேஸ்தாவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். இதைத்தொடர்ந்து, கும்டாவில் 22-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 23-ந் தேதி ஹாவேரி, உப்பள்ளி-தார்வார் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆதிதிராவிடர் சமுதாய மக்களை சந்திக்கிறார். 24-ந் தேதி ராய்ச்சூர், கலபுரகி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள ஆதிதிராவிட சமுதாய மக்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார். அன்றைய தினமே அவர் கர்நாடகத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
தாவணகெரேயில் விவசாய பேரணி
மேலும், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு வருகிற 27-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, தாவணகெரேயில் விவசாயிகள் பேரணியை மிகப்பெரிய அளவில் நடத்த பா.ஜனதா திட்டம் தீட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி சூரத்கல்லில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்ற உள்ளார்.

Related Tags :
Next Story