கார் டிரைவர் மர்மச்சாவு


கார் டிரைவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 16 Feb 2018 3:30 AM IST (Updated: 16 Feb 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பூந்தமல்லி, 

திருமுடிவாக்கம்- தாம்பரம் செல்லும் சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் விழுப்புரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 29), என்பதும், சென்னையில் தங்கி கார் டிரைவராக வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

நேற்று முன்தினம் இரவு தாம்பரம்- திருமுடிவாக்கம் சாலையில் காரை நிறுத்தி விட்டு குடிபோதையில் காரில் தூங்கி உள்ளார். இந்த நிலையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த அவர் இறந்துள்ளார்.

அதிக மது அருந்தியதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story