முகத்தில் இருந்த காயத்தால் இறப்பு ஏற்பட வாய்ப்பில்லை
வேடசந்தூர் அருகே தோட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய முகத்தில் இருந்த காயத்தால் இறப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புதுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2001-2006ம் ஆண்டு வரை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் எரியோடு அருகே தண்ணீர்பந்தம்பட்டி என்னுமிடத்தில் உள்ளது. கடந்த 12-ந் தேதி தோட்டத்துக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ஆண்டிவேல் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவருடைய செல்போன் எண்ணுக்கு உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு அறையில் மர்மமான முறையில் ஆண்டிவேல் பிணமாக கிடந்தார். அவருடைய முகத்தின் நாடி பகுதியில் லேசான காயம் இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆண்டிவேலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே ஆண்டிவேலை மர்ம மனிதர்கள் கொலை செய்து விட்டதாக அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்டிவேலின் உடலை டாக்டர் அன்புச்செல்வன் தலைமையில் டாக்டர்கள் லோகநாதன், பிரேம்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் உடலில் உள்ள சில உறுப்புகள் எடுக்கப்பட்டு ரசாயன பரிசோதனை செய்ய மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பின்பு, மருத்துவக்குழுவினர் கூறுகையில், ஆண்டிவேல் முகத்தின் நாடி பகுதியில் லேசான காயம் மட்டுமே உள்ளது. இந்த காயத்தினால் அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிரேத பரிசோதனை செய்த நேரத்தின்படி, அவர் இறந்து 15 மணி நேரம் முதல் 20 மணி நேரமாகி உள்ளது. அவருடைய இறப்புக்கான காரணங்கள் பரிசோதனை முடிவு வந்தவுடன் தெரியும், என்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேலின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு அவரது உடல் சொந்த ஊரான புதுரோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அவருடைய உடலை உறவினர்கள் தகனம் செய்தனர்.

Related Tags :
Next Story