மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2018 3:30 AM IST (Updated: 16 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கடற்கரை-ராயபுரம் ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி ஆகிய ரெயில்கள் நாளையும்,

மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, கடற்கரை-ஆவடி காலை 11.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி ஆகிய ரெயில்கள் நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் மதியம் 12.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்தும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் 2.30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்தும், வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் 2.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்தும் நாளை புறப்படும்.

கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் நாளை மறுநாள் புறப்படும்.

கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி ரெயில் மூர்மார்க்கெட்டுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.55 மணி ரெயில், வேளச்சேரி-ஆவடி இடையேயும், திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையேயும் நாளையும், நாளை மறுநாளும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story