சரக்குவேன் மீது லாரி மோதி விபத்து டிரைவர், கிளீனர் சாவு பால்கரில் பரிதாபம்


சரக்குவேன் மீது லாரி மோதி விபத்து டிரைவர், கிளீனர் சாவு பால்கரில் பரிதாபம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:15 AM IST (Updated: 16 Feb 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் சரக்குவேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசாய்,

பால்கரில் சரக்குவேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி, வேன் மோதியது

மும்பையில் இருந்து நேற்று காலை குஜராத் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி பால்கர் மாவட்டம் காசா அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த சரக்குவேன் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

மேலும் சரக்குவேனும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் சரக்குவேன், லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

டிரைவர், கிளீனர் சாவு


இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், சரக்கு வேன் டிரைவர் மற்றும் கிளீனர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். லாரி டிரைவர், கிளீனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பால்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பால்கரில் மும்பை– ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story