கைது நடவடிக்கைக்கு பயந்து லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய பெண் போலீஸ்
கைது நடவடிக்கைக்கு பயந்து பெண் போலீஸ் ஒருவர் வாங்கிய லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,

பெண் போலீஸ்
அரசு அதிகாரிகளும், போலீசாரும் லஞ்சம் வாங்குவதும், அவர்களில் சிலர் கைதாவதும் நமது நாட்டில் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு பயந்து யாரும் திருந்தியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய பணத்தை கைது நடவடிக்கைக்கு பயந்து பெண் போலீஸ் ஒருவர் வாயில் போட்டு விழுங்கிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கோலாப்பூர் மாவட்டம் சந்த்காட் பகுதி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் தீபாலி காட்கே. அந்த போலீஸ் நிலையத்திற்கு வந்த 28 வயது வாலிபர் ஒருவர் பாஸ்போர்ட் எடுக்க நன்னடத்தை சான்று கேட்டு விண்ணப்பித்தார். அதை பரிசீலித்த தீபாலி காட்கே ரூ. 300 லஞ்சம் தந்தால் மட்டுமே அந்த சான்று வழங்க முடியும் என்று தெரிவித்து விட்டார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத அந்த வாலிபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இவரின் புகாரை ஏற்றுகொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீபாலி காட்கேயை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதற்காக ரசாயன பொடி தடவிய பணத்தை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த வாலிபர் அதை போலீஸ் நிலையத்திற்கு சென்று பெண் போலீசான தீபாலி காட்கேவிடம் கொடுத்தார்.
பணத்தை விழுங்கினார்
இந்த நடவடிக்கைகளை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணித்தனர். அவர்கள் பெண் போலீசை பாய்ந்து பிடிக்க சென்றனர். இதை அறிந்த பெண் போலீசுக்கு, எங்கே அவர்களிடம் சிக்கிவிடுவோமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லஞ்ச பணத்தை தனது வாயில் போட்டு மென்று விழுங்க தொடங்கிவிட்டார்.
இது லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் லஞ்ச ஒழிப்பு பெண் போலீஸ் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு தீபாலி காட்கேவின் வாயை திறந்தார். அவர் விழுங்கிய நோட்டுகளில் கிழிந்த நிலையில் பாதியை மீட்டார்.
இது தொடர்பாக அந்த பெண் போலீசை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ருசிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story