ஜோதிடத்தில் மருத்துவம் : மனிதனை உருவாக்கும் கிரகங்கள்
உணவு சுழற்சி முறை பற்றி, நாம் விஞ்ஞான பாடத்திலும், இயற்பியல் பாடத்திலும் படித் திருப்போம். இந்த உணவு சுழற்சி முறையில் மனிதனுக்கும் பங்குண்டு.
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை; மனிதன் மீது மண்ணுக்கு ஆசை. இந்த வாசகத்தில் தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது.
மனிதன் உண்பதற்கு தேவையான உணவு வகைகளில் காய், கனிகள், அரிசி, பருப்பு, கிழங்கு, கீரை வகைகள் முதல் கொண்டு பலவகையானவை மண்ணில் இருந்தே பெறப்படுகிறது. இதனை மனிதன் உண்டு, தனது உடலுக்குள் ரத்தமாகவும், சத்தாகவும் உருமாற்றுகிறான். மண்ணில் கிடைத்ததை உண்ட மனிதன், வயது முதிர்வடைந்து இறந்தபின் அந்த மண்ணிற்கே சென்று விடுகிறான்.
மனிதனின் உடலில் உருவாகும் ரத்தம் விந்துவாக உருமாறி நிற்கிறது. மனிதன், இன்னொரு மனிதனைப் படைக்க, இந்த விந்தணுவே மூலக்காரணமாக உள்ளது. ஆணின் விந்தணு இல்லாமல் எந்த விதமான உயிரும் உண்டாவதில்லை. அதனால் தான் வேதங்களும், சாஸ்திரங்களும், ஏன்.. ஜோதிடமும் கூட ஆணிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த முக்கியத்துவம் தான் முன் நாட்களில் பெண்களை, குழந்தைப் பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக மட்டுமே முடக்கி வைத்திருந்தது.
ஆனால் இன்னொரு உயிர் இந்த பூமிக்கு வர காரணமாக இருப்பவர்களின் பெரும் பங்கு பெண்களுடையது. அதை இந்தச் சமூகம் உணர்ந்து கொண்டதின் பலனே, இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார்கள். அந்த கால மாற்றம், எல்லோருக்கும் சம உரிமை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பெண் தன் குழந்தையை 10 மாதம் வயிற்றில் சுமக்கிறாள். அந்த 10 மாத காலத்தில் குழந்தைக்கு என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை, இன்றைய விஞ்ஞானம் ஸ்கேன் செய்து காட்டுகிறது. நாமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். ஆனால் இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முடைய ரிஷிகள், ‘ஊர்வசி பஞ்சரத்னம்’ என்ற நூலில் விளக்கமாக குறிப்பிட்டு உள்ளனர்.
ஆணிடம் இருந்து பெறப்படும் விந்துவிற்கு ‘சுக்லம்’ என்பார்கள். இந்த விந்துவிற்கு காரணமான கிரகம் சுக்ரன். இதன் பாவம் 8–ம் பாவம். பெண்ணின் கர்ப்பப் பைக்குள் தோன்றுவது சுரோனிதம். அதற்கு காரணமான கிரகம் செவ்வாய். இதற்குரியது 5–ம் பாவமாகும். ஆணின் சுக்லம் என்பது, பெண்ணின் யோனி வழியாக கர்ப்பப் பையில் சென்றடைய வேண்டும் என்பது விதி. ஆனால் இங்குதான் விதி விளையாடும். பெண்ணின் சுரோனிதம் என்னும் திரவம், அவ்வளவு எளிதாக விந்தணுவை எடுத்துக் கொள்ளாது. விந்தணுவை உள்ளே விடாமல் அது தடுக்கும். இங்குதான் விந்துவும், சுரோனிதமும் சண்டையிடும். அதாவது சுக்ரன், செவ்வாய் சண்டை உருவாகும். ஒரு வழியாக விந்து, சுரோனிதத்தை உடைத்து உள்ளே சென்று விட்டால், குழந்தை உற்பத்தி தொடங்கும். விந்து உள்ளே செல்ல முடியாமல் போனால், யோனி வழியாக சிறுநீருடன் கலந்து வெளியேறிவிடும். இங்கு பெண்மை தோற்றால் தான் ஆண்மை ஜெயிக்க முடியும்.
பெண்ணின் சுரோனிதத்தை உடைத்துக் கொண்டு கர்ப்பப் பைக்குள் சென்ற விந்தணு, அடுத்த இரண்டு நாட்களில் ஒன்று சேர்ந்து முத்து போல் முதல் கரு தோற்றத்தை வெளிப்படுத்தும். இங்கிருந்து தான் அந்த கருவிற்கு, கிரகங்கள் வேலை செய்யத் தொடங்கு கிறது. ஒரு கரு உருமாறி வருவதற்கு, முதல் காரண கர்த்தாவாக இருப்பவர் குரு பகவான். கருவானது, பிண்டமாக உருமாறி வருவதற்கு தேவையான சக்திகளை, தாயின் உடலில் இருந்தே எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறது.
குழந்தை பிறந்து, இந்தப் பூமியில் வந்து பிராண வாயுவை சுவாசிக்கும் போது தான் ஜாதகம் வேலை செய்கிறது. பிறந்த நேரம் முதற்கொண்டு தான் விதி எழுதப்படுவதாக ஜோதிட நூல் சொல்கிறது. என்ன தான் ஆணின் விந்து நன்றாக இருந்தாலும், பெண்ணின் ஜாதகத்தில் 5–ம் பாவம், அதன் அதிபதி நன்றாக இருந்தால் தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். பெண்ணிற்கு 5–ம் பாவம், அதன் அதிபதி ஆகியவற்றுக்கு மேலாக குழந்தை உருவாக காரணமான குருவும் நன்றாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் பெண்ணிற்கு புத்திர பாக்கியம் கிடைப்பது அரிது. பெண்ணின் ஜாதகத்தில் 5–ம் பாவத்தில் சனி, ராகு, கேது இருந்தாலும், புத்திர பாக்கியம் தாமதமாகும்.
–ஆர்.சூரியநாராயணமூர்த்தி.
மாதங்களும்.. வளர்ச்சியும்..
முதல் மாதம்: கருவானது முத்தாக உருவெடுத்து, முட்டை வடிவில் இருந்து கரு பிண்டமாக மாறும் வரை குருவே காரண கர்த்தாவாக இருக்கிறார். இங்கு மனிதன் விதி, அவனது தலையெழுத்தை குரு பகவான், பிரம்மனாக இருந்து எழுதி வைக்கிறார். லக்ன பாவத்திற்குரிய வேலை இங்கு தொடர்கிறது.
இரண்டாம் மாதம்: தலை, முதுகு பகுதி உண்டாகிறது. இதற்கு காரணமான கிரகம் சந்திரன். லக்னம் 2–ம் பாவத்திற்குரிய வேலையைச் செய்கிறது.
மூன்றாம் மாதம்: இடுப்பு, கை, கால்கள் உண்டாகிறது. இதற்கு காரணமான கிரகம் புதன். 2, 8–ம் பாவத்தின் வேலை தொடங்குகிறது. இந்த மாதத்தில் தாயின் வயிறு முன்னே தள்ளப்படும்.
நான்காம் மாதம்: தெளிவான முகம், மூக்கு, உடலில் நெஞ்சு, குடல் பகுதிகள் அதன் உறுப்புகள் அனைத்தும் உண்டாகிறது. இதற்கு காரணமான கிரகங்களாக சூரியனும், செவ்வாயும் இருக்கின்றன. இரண்டும் இணைந்து இந்த வேலையைச் செய்கிறது. இங்கு 3, 5–ம் பாவம் வேலை செய்கிறது.
ஐந்தாம் மாதம்: வாய், நாக்கு, காது, கண் போன்ற தலை உறுப்புகள் வளர்ச்சி பெறுகிறது. இங்கு சூரியன் மற்றும் சுக்ரன் கிரகங்கள் வேலை செய்கிறது. இதற்குரிய பாவம் 6 ஆகும்.
ஆறாம் மாதம்: நகம், முடி வடிவம், மர்ம உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்ற நிலைக்கு மாறுதல். இதற்கு காரணமான கிரகம் செவ்வாய் மற்றும் சுக்ரன் ஆகும். இதற்குரியது 8–ம் பாவம் ஆகும்.
ஏழாம் மாதம்: தலை முடி, எலும்புகள் உருமாறுவதும், நரம்புகள் வளர்ச்சி பெற்று இருப்பதும் இந்த மாதத்தில் தான். இதற்கு காரணமான கிரகங்கள் புதன், சனி. இதற்குரியது 9–ம் பாவம்.
எட்டாம் மாதம்: தாய் சத்துகள் அனைத்தும் குழந்தை எடுத்துக் கொள்ளும். சில குழந்தைகள் முழு வளர்ச்சி பெற்றிருந்தால் அபான வாயு கருப்பைக்குள் சென்று, குழந்தை வெளியே வர புரண்டு நிற்கும். அதுபோன்ற நேரத்தில் மருத்துவர் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் 8–ம் மாதத்தில் குழந்தையை வெளியே எடுத்துவிடுவார்கள். குழந்தை சரியான வளர்ச்சி, சரியான எடை இல்லையென்றால் உடனே இன்குபெட்டரில் வைத்து சில நாட்கள் கவனித்து வருகிறார்கள். குழந்தை வெளி உலக தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பிராணவாயுவை தானே சுவாசிக்கும் போது குழந்தையை இன்குபெட்டரில் இருந்து வெளியே எடுப்பார்கள். இதனை ‘குறை பிரசவம்’ என்பார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருக்கும். இந்த 8–வது மாதத்தில் 9–ம் பாவம் வேலை செய்யத் தொடங்குகிறது.
ஒன்பதாம் மாதம்: மனம் அமைப்பு, வெளியுலக நடப்புகளை கவனிக்கும் திறன், தனது கைகளை கூப்பிய நிலைக்கு கொண்டு வருதல், பிரசவ நிலைக்கு ஏற்றவாறு தன்னை குழந்தை தயார் செய்து கொள்ளும் நிலைகள் இந்த மாதத்தில் நடைபெறும். இங்கு சந்திர கிரகமே முழு காரணமாக இருந்து பணியாற்றுகிறது. இதற்குரியது 3–ம் பாவம்.
பத்தாம் மாதம்: அபான வாயு கருப்பைக்குள் சென்று, தண்ணீர் குடத்தில் மிதந்து நிற்கும். அது குழந்தையை வெளியே தள்ளி, தாயின் உடலை விட்டு நீங்கி, தாயின் பிண்டத்தில் இருந்து, உலக அண்டத்திற்கு வரச் செய்யும். இந்த பிரசவத்திற்கு காரணமான கிரகம் சூரியன். லக்ன பாவம் இங்கு தான் தொடங்குகிறது.

Related Tags :
Next Story