குதிரைக்கு ரூம் வேணும்!
கனடாவைச் சேர்ந்த குதிரைப் பயிற்சியாளர் லிண்ட்சே, சமீபத்தில் குதிரை பந்தயம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
பந்தய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக, சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தவர், தன்னுடைய குதிரையுடன் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்துவிட்டார். தனக்கு ஒரு அறை, குதிரைக்கு ஒரு அறை என மொத்தம் இரண்டு அறைகளை கேட்டு, ஓட்டல் ஊழியர்களை அலற விட்டிருக்கிறார்.
செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்து செல்வதற்கும், ஓட்டல்களில் தங்கவைப்பதற்கும் அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதால், ஓட்டல் ஊழியர்களும் குதிரைக்கு தனி அறை கொடுத்தனர். ஆனால் நல்ல வேளையாக சிறிது நேரத்தில் அந்த பெண் குதிரையை அழைத்து கொண்டு அறையை காலி செய்துவிட்டாராம்.
இது குறித்து விடுதியின் வரவேற்பாளர் கூறியபோது, ‘‘எனக்கு செல்லப்பிராணிகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி எதுவும் தெரியாது. லிண்ட்சே தொலைபேசியில் கேட்டவுடன், விளையாடுகிறார் என்று நினைத்துதான், குதிரையுடன் வரச் சொன்னேன். ஆனால் அவர் நிஜமாகவே குதிரையுடன் வந்துவிட்டார். வேறு வழியின்றி அறைக்குள் குதிரையை அனுமதித்தோம். உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டேன். 11 கிலோவுக்குக் குறைவான செல்லப் பிராணிகளை மட்டுமே அறைக்குள் அனுமதிக்கும்படி கூறினார். நல்லவேளை சில மணி நேரத்தில் குதிரையுடன் லிண்ட்சே வெளியேறிவிட்டார். இல்லையேல் என்னுடைய வேலை பறிபோயிருக்கும்’’ என்கிறார், பரிதாபமாக.
# ஹலோ.. ஜல்லிக்கட்டு காளையோடு அமெரிக்கா வரோம். ரூம் தருவீங்களா..?

Related Tags :
Next Story