யானைகளை பாதுகாப்போம்...!
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி.
சங்க இலக்கியங்களிலும், வரலாற்று ஏடுகளிலும் புலவர்களால் மிகவும் புகழ்ந்துரைக்கபட்ட யானை, கரி,வேழம் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. வலிமை மிக்க விலங்கான யானையுடன் நமது நாட்டுக்கு ஆழ்ந்த தொடர்பு உள்ளது. மன்னராட்சி காலத்தில் யானைப் படைக்கு தனி மவுசு இருந்தது. இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் யானைகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
ஒரு காலத்தில் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்பட்டு வந்தன. இப்போது யானை வேட்டை தடுக்கப்பட்டுவிட்டாலும், அசம்பாவித சம்பவங்களில் யானைகள் கொல்லப்படுவது இன்னும் முழுமையாக தடுக்கப்படவில்லை. குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக வைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் மிகவும் சோகத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக ரெயில்கள் மோதி யானைகள் இறப்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 26 வனப்பகுதிகளில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பாதை மீட்டர்கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் ரெயில் மோதி பலியாகும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மீளாத சோகம். இதற்கு ரெயில்களின் வேகமும், ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகமானதே காரணம்.
தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக யானை இறப்பு சம்பவங்கள் ரெயில்களால் நிகழ்கின்றன. 1987-ம் ஆண்டில் இருந்து 2010-ம் ஆண்டு வரை நமது நாட்டில் மட்டும் 150 யானைகள் ரெயில்கள் மோதி இறந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ரெயில் விபத்தில் இறந்துள்ளன என்பது வேதனைக்குரிய செய்தி தான்.
ரெயில் மோதி புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட சில விலங்குகளும் இறந்துள்ளன என்றாலும், அது அபூர்வ நிகழ்வாகவே இருக்கிறது. அந்த விலங்குகள் எளிதில் விபத்தில் இருந்து தப்பிவிடுகின்றன. ஆனால் கம்பீரத்துக்கு காரணமாக உள்ள பெரிய உடலும், மெதுவான நடையுமே யானைகளின் இந்த அழிவுக்கு காரணமாகிவிடுகிறது. ரெயில் வரும்போது அவற்றால் எளிதில் தப்ப முடிவதில்லை.
அதுமட்டுமின்றி யானைகள் கூட்டமாக செல்வதும் இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக உயிரிழப்புக்கு காரணமாகிறது. யானைகள் குடிநீர், உணவு தேடியும், உயிரை காப்பாற்றிக் கொள்ளவுமே இதுபோல இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த இடம்பெயரும் பாதையில் தண்டவாளங்கள் அமைந்திருப்பதால் அவற்றை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் அவற்றுக்கு ஏற்படுகிறது.
மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள மகாநந்தா வனவிலங்கு சரணாலயத்தில் ரெயில் தண்டவாளம் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததன் காரணமாக அந்த தண்டவாளம் 55 யானைகள் இறப்புக்கு காரணமாகியுள்ளது. இத்தனைக்கும் இந்தியன் ரெயில்வேயின் சின்னமாக இருப்பது சிக்னல் விளக்கை கையில் ஏந்தி நிற்கும் ‘போலு’ என்ற குட்டி யானையின் சின்னம் தான். சின்னத்தில் யானையை வைத்துக்கொண்டு அதன் இறப்புக்கு பெரும் காரணமாக விளங்குவது முரண்பாட்டின் மொத்த உருவம்.
2013-ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்காளத்தில் ரெயில் மோதி 3 யானைகள் இறந்தன. மீண்டும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 40 யானைகள் கொண்ட கூட்டத்தின் மீது ரெயில் மோதியதில் 2 குட்டிகள் உள்பட 9 யானைகள் இறந்தன. இதுவே இந்தியாவில் நடைபெற்ற மோசமான யானை-ரெயில் விபத்தாக பதிவாகி கறை படிந்துவிட்டது. இந்த சம்பவமே உலகளவில் ஊடகங்களின் பார்வை இந்த சோகத்தின் பக்கம் திரும்ப காரணமாகியது. சமீபத்தில் கடந்த 10-ந் தேதி கூட அசாம் மாநிலம் லும்திங் வனப்பகுதியில் ரெயில் மோதி 5 யானைகள் இறந்துள்ளன.
ரெயில்வே நிர்வாகமும் யானைகள் ரெயில்களில் அடிபட்டு இறப்பதை தடுக்க சில வழிமுறைகளை கையாண்டது. உதாரணத்துக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் ராஜாஜி தேசிய பூங்காவில் 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருப்புப்பாதை செல்கிறது. இங்கு கூட்டு ரோந்துபடை தண்டவாளம் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தது. ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன. தண்டவாளம் ஓரமாக இருந்த புதர்கள், குறுகிய வளைவுகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் என்ஜின் டிரைவர்கள் எளிதாக தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை காணமுடியும். இதுபோன்ற நடவடிக்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த தேசிய பூங்காவில் ஒரு யானை கூட ரெயில் மோதி இறக்கவில்லை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை மாவட்டம் மதுக்கரை கேரள எல்லையில் தான் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது. 2016-ம் ஆண்டில் 20 நாட்களில் இந்த பகுதியில் மட்டும் 6 யானைகள் ரெயில் மோதி இறந்துள்ளன. இதனை தடுக்க அகழி தோண்டுதல் போன்ற சில நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. யானைகள் கடக்கும் பகுதியில் ரெயில்கள் குறைந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை உறுதி செய்ய வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
இந்தியாவில் இதுவரை ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வழிகள் தான் கையாளப்பட்டு வருகின்றன. ஏன், யானைகளை எச்சரிக்கும் வழிகளை கையாளக் கூடாது? ரஷியா போன்ற நாடுகளில் ரெயில்கள் வரும்போது தண்டவாள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வனவிலங்குகள் அஞ்சக்கூடிய வகையில் இயற்கையாக நிகழும் ஒலிகளை எழுப்பும் கருவிகளை கண்டுபிடித்து பொருத்தியுள்ளனர். இது நல்ல பலனை அளித்துள்ளது.
அதுபோல இந்தியாவிலும் யானைகள் அஞ்சக்கூடிய ஒலிகளை எழுப்பும் கருவிகளை பொருத்தலாம் அல்லது வனப்பகுதியில் செல்லும் ரெயில்களிலும் அந்த கருவிகளை பொருத்தி வனப்பகுதியில் செல்லும்போது மட்டும் ஒலிக்கச் செய்யலாம். இதுகுறித்து வனத்துறையும், ரெயில்வே துறையும் இணைந்து யானைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டமைப்பை மேம்படுத்துவதில் எப்படி சமரசம் செய்துகொள்ள முடியாதோ அதுபோல வன உயிரினங்களை பாதுகாப்பதையும் தவிர்க்கக் கூடாது. எனவே இரண்டையும் கவனத்தில் கொண்டு அரசின் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். ரெயில்கள் மோதி யானைகள் இறப்பு என்பதே இல்லை என்ற நிலையை எட்ட முடியாவிட்டாலும், குறைக்கவாவது முயற்சிப்போம். இயன்ற அளவு யானைகளை பாதுகாப்போம்.
-எஸ்.ஏ.ஒளி.

Related Tags :
Next Story