நெல்லையப்பர் கோவிலில் கேரள நம்பூதிரிகள் சிறப்பு யாகம் பக்தர்கள் கடும் எதிர்ப்பு
நெல்லையப்பர் கோவிலில் கேரள நம்பூதிரிகள் சிறப்பு யாகம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நெல்லை,

கேரள நம்பூதிரிகள் யாகம்
நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் கேரள நம்பூதிரிகள் நேற்று முன்தினம் மாலை சிறப்பு யாகத்தை தொடங்கினர். நாராயணநம்பூதிரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து யாகம் நடத்தி வருகின்றனர். இந்த யாகம் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது.
இந்த யாகத்துக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டி நெல்லை திருக்கோவில்கள் வழிபடுவோர் சங்கம், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் பரஞ்ஜோதி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
யாகத்தை நிறுத்த வேண்டும்
ஆகம விதிப்படி நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நெல்லையப்பர் கோவில்களின் துணை கோவில்களுக்கு திருப்பணி முடித்த பிறகே கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். 90 நாட்களுக்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்தும் தேதியை அறிவிக்க வேண்டும். நெல்லையப்பர் கோவிலில் முறையாக பாலாலயம் நடைபெறவில்லை. கோவிலுக்கு தோஷம் வந்து விட்டதாக கூறி கேரள நம்பூதிரிகளை வைத்து யாகம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் சிவாச்சாரியார்கள் தான் வழிபாடு நடத்தி வருகிறார்கள். வழக்கத்துக்கு மாறாக நம்பூதிரிகள் யாகம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக யாகத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story