தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில மாநாடு இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
மாநில மாநாடு
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநில மாநாடு நாளை (அதாவது இன்று) தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது. நிறைவு நாளில் கட்சியின் சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பும், பேரணி, பொதுக்கூட்டமும் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
4 நாட்கள் நடைபெறும் மாநில மாநாட்டில், தமிழக மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். சமீப காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில், விருதுநகரில் பட்டாசு உற்பத்தி, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
தொழில் வளர்ச்சி பாதிப்பு
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஏற்றுமதி மூலம் பெற்றுத்தரக்கூடிய திருப்பூரில் 30 சதவீதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி தந்தார். தற்போது ஆண்டுக்கு 1½ லட்சம் பேருக்குகூட வேலை கிடைக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, விரிவாக்கத்துக்கு அனுமதிக்கக்கூடாது.
போராட்டம்
தமிழகத்தில் மின்சார வாரிய தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில அரசு உடனடியாக போராடக்கூடிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு கொண்டுவர மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய தோல்வி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஓராண்டு அரசு நிர்வாகம் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய தோல்வி அடைந்து உள்ளது. மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக மோசமான பல முடிவுகளை எடுத்து உள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி, இந்தி திணிப்பு, உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், நீட் தேர்வு போன்ற மாநில மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த பல மோசமான முடிவுகளை எதிர்க்க கூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தைரியம் இல்லை. மத்திய பா.ஜனதா அரசின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை பொறுத்தவரை வரும்போது தேர்தல் உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்யும். மாநாட்டில் தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்படாது.
பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை வழிப்பறி அதிகமாக நடந்து வருகிறது. இந்த குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் கொலை, கொள்ளை கட்டுப்படுத்த முடியும். நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின்போது, வரவேற்புக்குழு தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story