ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு கருத்துகேட்பு கூட்டம் பாதியில் ரத்து

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு கருத்துகேட்பு கூட்டம் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 17 Feb 2018 2:00 AM IST (Updated: 17 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கருத்துகேட்பு கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

விளாத்திகுளம்,

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கருத்துகேட்பு கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

கருத்துகேட்பு கூட்டம்

நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்வது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம், விளாத்திகுளம் அருகே குளத்தூர் தனியார் மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது.

தாசில்தார் லிங்கராஜ் தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி (குளத்தூர்), ராஜ் (புதூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாதியில் ரத்து

கூட்டம் தொடங்கியதும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அனைவரும் பேசினர். அவர்கள் கூறுகையில், எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தால் பெரும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படும் என்று கூறினர். தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

Next Story