மின்ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை
மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்,
சம்பள உயர்வு, காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மின்வினியோகம், பழுது சரிபார்த்தல், மின்கட்டணம் உள்ளிட்ட பண பரிவர்த்தனை பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் மின்சார தடை ஏற்படும் என்று கருதி பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான பணிகளை முன்எச்சரிக்கையாக மேற்கொண்டனர். நேற்று அதிகாலையிலேயே மின் மோட்டார்களை போட்டு போதிய அளவு முடிந்தவரை தண்ணீரை பிடித்து வைத்தனர். மாவு அரைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளையும் முன்கூட்டியே மேற்கொண்டனர்.
இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சேமிக்க பயன்படுத்தும் பேட்டரிகளை சர்வீஸ் செய்து தயார் நிலையில் வைத்தனர். இந்நிலையில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் மின்வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து மின்வாரிய உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஊதிய உயர்வு, காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் மக்களின் அத்தியாவசிய மின்வினியோகம் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு மின்ஊழியரின் கடமை. இதன்காரணமாக போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தாலும் மின்வினியோகம் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்கும் பணியாளர்களை கொண்டு நிலைமை சரிசெய்து வருகிறோம். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சில தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதால் அந்த சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மின்வினியோகம் மற்றும் மின்பழுது போன்றவற்றில் சிறிதளவு பாதிப்பு கூட ஏற்படாதவாறு பார்த்து கொண்டுள்ளோம். இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சார வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதேநிலையை உருவாக்கி மக்கள் பாதிக்காதவாறு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story