காவிரி ஆற்றில் இருந்த முதலை பிடிபட்டது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்த முதலை பிடிபட்டது.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலையில் உள்ள காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் திருமால், முதலைகள் நடமாட்டம் இருந்தால் அவற்றை பிடிக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதா? என தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வன அலுவலர் கேசவன், வனவர் காளியப்பன் மற்றும் வனத்துறையினர் ஊட்டமலை காவிரி ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 அடி நீளமுள்ள பெண் முதலை ஒன்று கரையின் ஓரத்தில் படுத்திருந்தது. இதையடுத்து அந்த முதலையை வலை போட்டு வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
இதையடுத்து அந்த முதலை ஒகேனக்கல்லில் உள்ள முதலை பண்ணையில் விடப்பட்டது. ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றி திரிந்த முதலைபிடிப்பட்டதால் அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் முதலைகள் உள்ளதா? எனவும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story