தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:30 AM IST (Updated: 17 Feb 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியாக ஆட்சி மொழி பயிலரங்கரத்தை சேலம் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அன்புசெழியன் தொடங்கி வைத்து ஆட்சி மொழி வரலாறு சட்டம் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமணன், புலவர் வெற்றியழகன் ஆகியோர் தமிழ் ஆட்சி மொழி திட்டம் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியின் 2-வது நாளில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியை கீதா, ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் தமிழ் ஆட்சி மொழி திட்டம் தொடர்பாக பயிற்சி அளித்தனர். மாலை ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் ராசேந்திரன் வாழ்த்தி பேசினார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் விஜயராகவன், ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் குறித்து பேசினார்.

இதில் 2015-ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகத்திற்கான கேடயமும் சிறந்த முறையில் குறிப்புகள், வரைவுகள் எழுதியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பாஸ்கரன், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் கோவிந்தராசு, தமிழ் அறிஞர் கருமலை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் நன்றி கூறினார்.

Next Story