சிட்கோ தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டரிடம் வலியுறுத்தல்
பொறியியல் சார்ந்த தொழில் கூட்டமைப்புகளுக்கு சிட்கோ தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கீடு செய்ய பெரம்பலூர் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் மாநில அமைப்பு மற்றும் பெரம்பலூர் மாவட்ட சங்கம் சார்பில் சிறு மற்றும் குறுந்்தொழில்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் தனலட்சுமிசீனிவாசன் ஓட்டலில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ‘சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் தாங்கள் நடத்தும் தொழிலின் மூலம் கிடைக்கும் உற்பத்தி அல்லது தயாரித்த பொருட்கள் மக்களை கவருகின்ற வகையில் இருக்குமாறு செய்திட வேண்டும்.
எந்தந்த பகுதியில் எந்தவகையான மூலப்பொருட்கள் கிடைக்கிறதோ அதற்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னவெங்காயம் அதிகம் விளைவதால், வெங்காயத்தை உரித்து தரும் எந்திரங்களை உருவாக்குவதிலும், வெங்காய உரிப்பு தொழிலிலும் ஈடுபட வேண்டும். தொழில்முனைவோர் தங்களது தொழிலில் தொய்ந்துவிடாமல் எப்போதும் ஆர்வத்துடன் பணியாற்றினால் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைந்திட முடியும்’ என்றார்.
இதில் மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார். மாநில தலைவர் பாபு, தமிழக கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க மாநில தலைவர் பச்சையப்பன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரவிந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அருள்தாசன், மத்திய அரசின் தொழில்முனைவோர் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் மணிகண்டன், சிட்கோ கிளை மேலாளர் ஜெயலட்சுமி, தொழில் வணிகத்துறை உதவி இயக்குனர் ஏகாம்பரம் உள்பட அதிகாரிகள் பலர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் 25 பேர் இணைந்த பொறியியல் சார்ந்த தொழில்கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பொறியியல் சார்ந்த தொழில் கூட்டமைப்புகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் இளங்கோவன், கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story