‘பேஸ்புக்’கில் பழகி டாக்டர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி கும்பலுக்கு வலைவீச்சு


‘பேஸ்புக்’கில் பழகி டாக்டர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2018 3:45 AM IST (Updated: 17 Feb 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

‘பேஸ்புக்’கில் பழகி டாக்டர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை,

‘பேஸ்புக்’கில் பழகி டாக்டர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

‘பேஸ்புக்’ பழக்கம்

மும்பை பைகுல்லா பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ‘பேஸ்புக்’கில் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மார்க் என்பவர் அறிமுகம் ஆனார். டேவிட் மார்க் பி.எம்.டபிள்.யு. கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து டாக்டர் மனைவியும், டேவிட் மார்க்கும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு வாட்ஸ்-அப்பில் பேசி வந்தனர்.

இந்தநிலையில் டேவிட் மார்க், டாக்டர் மனைவியின் பிறந்தநாளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த செல்போன், பரிசு பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை அனுப்புவதாக கூறினார்.

ரூ.10 லட்சம் மோசடி

சம்பவத்தன்று சுங்கவரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு நேகா என்ற பெண், டாக்டரின் மனைவியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் இங்கிலாந்தில் இருந்து பரிசு பொருட்கள் வந்திருப்பதாகவும் அதற்கு சுங்க வரி செலுத்தவேண்டும் எனவும் கூறினார். டாக்டரின் மனைவியும் இதை உண்மையென நம்பி அந்த பெண் கூறிய வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். பின்னர் மேலும் ஒருவர் டாக்டர் மனைவியிடம் சுங்க வரித்துறை உயர்அதிகாரி என கூறி பேசினார். அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி டாக்டர் மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை பறித்தனர்.

இந்தநிலையில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த டாக்டரின் மனைவி, இது குறித்து தனது கணவரிடம் கூறினார். பின்னர் இந்த மோசடி குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் மனைவியிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story