விவசாயத்திற்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்


விவசாயத்திற்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:44 AM IST (Updated: 17 Feb 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வேலூர்,

கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

குடியாத்தம் கருவூலம் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தாலுகா அளவில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில் கூட்டம் நடந்தாலும், அதிகாரிகள் யாரும் கலந்துகொள்வதில்லை.

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு ஒருவருடத்திற்குமேல் ஆகிறது. ஆனால் வறட்சி நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்தினால் பணம் இல்லாமல் திரும்பிவந்துவிட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் உழவர் சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்த கலெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அதேபோன்று உழவர்சந்தைக்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினமும் வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக அம்மா உணவகம் திறக்க வேண்டும். அரியூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அரியூர், ஒடுகத்தூர் பகுதிகளுக்கு பல கிலோமீட்டர்தூரம் சுற்றிசெல்லவேண்டி இருக்கிறது.

திமிரி பகுதியில் எலிகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். ஆம்பூர் பகுதியில் வனவிலங்குகள் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று சென்றால் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் சான்றுவாங்க வேண்டும் என்கிறார்கள். வருவாய்த்துறையில் மட்டும் சான்றுபெற்றால் போதும் என்று உத்தரவிடவேண்டும்.

இதனையடுத்து கலெக்டர் ராமன் பதிலளித்து பேசுகையில், குடியாத்தம் கருவூலம் தொடர்பாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருவூலம் மூடப்பட்டுள்ளதால் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்ள முடியாவிட்டால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க வேண்டும். அரியூர் மேம்பால பணிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும்’ என்றார்.

கூட்டத்தில் வி.ஐ.டி. எம்.டெக். மாணவி மதுமதி விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பது குறித்து விளக்கினார். அப்போது யானைகள் விவசாய நிலங்களுக்குள் வரும்போது அதை கண்காணிக்க கேமரா பொருத்தினால், 100 மீட்டர்தூரத்தில் யானைகள் வரும்போதே விவசாயிகளுக்கு செல்போனில் தகவல் வரும். அதைவைத்து யானைகள் விவசாய நிலத்திற்குள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து விளக்கினார்.

Next Story