மாவட்டத்தில் நடந்த மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் 360 பேர் பங்கேற்பு


மாவட்டத்தில் நடந்த மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் 360 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் 360 பேர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து, அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி நேற்று வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., தமிழ்நாடு பவர் என்ஜினீயர்கள் சங்கம், அம்பேத்கர் பணியாளர் சங்கம் உள்பட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், 5 செயற்பொறியாளர் அலுவலகங்கள், 38 துணை மின்நிலையங்கள், 84 பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1,767 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், 360 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது 20 சதவீதம் ஆகும். குறிப்பாக கம்பியாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களே அதிகமாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன்காரணமாக பராமரிப்பு பணிகள், புதிய மின்மீட்டர் பொருத்துதல், மின்தடை ஏற்பட்டவுடன் சரிசெய்யும் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதால் பணிகள் பாதிக்கப்படவில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின் கட்டணம் வசூலிக் கும் மையங்களிலும் போதுமான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்ததால் வழக்கம் போல பொதுமக்கள் கட்டணங்களை செலுத்தி ரசீதை பெற்றுக்கொண்டனர்.

Next Story