மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 17 Feb 2018 4:34 AM IST (Updated: 17 Feb 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஊதிய உயர்வு, காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அரசின் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்) திட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் ராமசாமி, திட்ட பொருளாளர் கண்ணன், கோட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், கோயராஜ், பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் திட்ட செயலாளர் ஆனந்த், கோட்ட செயலாளர் அருளானந்தம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொருளாளர் ஜி.குமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் திட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் பொருளாளர் வி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story