இன்னலில் இல்லத்தரசிகள்!
தமிழக மக்களை மட்டுமின்றி 6 மாநில மக்களை பாதிக்கும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.
கியாஸ் வாடகை டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம், நேற்று முன்தினம் வாபஸ் ஆகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாமக்கல்லில் கூடிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழு கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக பாட்லிங் பிளாண்டுகளில் சுமார் 35 லட்சம் சிலிண்டர்கள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தென் மண்டலங்களில் உள்ள சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் டன் சமையல் கியாஸ் லோடு ஏற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இல்லத்தரசிகள் தான். கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது சரியாவதற்கு குறைந்தது ஒருமாதத்துக்கும் மேலாகி விடும். அதுவரை சமையல் கியாஸ் சிலிண்டருக்கு என்ன செய்வது? என பெண்கள் இப்போதே புலம்ப தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்கள் பொதுமக்களை மட்டுமின்றி, பொதுதேர்வை எழுத இருக்கும் மாணவர்களையும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, போராட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வை எட்ட வேண்டும். அத்தியாவசிய தேவையான சமையல் கியாஸ் வினியோகம் பாதிக்கப்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களும் பொதுமக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு தங்களது இறுக்கத்தை தளர்த்த வேண்டும். போராட்டம் செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அது பொதுமக்களை பாதிக்காமல் இருக்கட்டும்.
-நாஞ்சில் அண்ணா

Related Tags :
Next Story