ஹெல்மெட் அணியாததால் வாலிபர் மீது தாக்குதல்: போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு
அருமனையில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாததால் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
அருமனை,
அருமனை மேலத்தெரு பகுதியில் கடந்த 10–ந் தேதி போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜேஷ் (வயது 29) என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போலீசார் அவரது கையை பிடித்து இழுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷ் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அருமனையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இந்த கல்வீச்சில் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.
இந்தநிலையில், மறியல், கல்வீச்சு, மற்றும் போலீசாரை தரக்குறைவாக பேசியது போன்ற சம்பவங்கள் தொடர்பாக அருமனை பகுதியை சேர்ந்த லிஜின், ஆபிரகாம், குஞ்சாலுவிளையை சேர்ந்த குமார், திருவரம்பு பகுதியை சேர்ந்த சதீஷ், அஜின்மோன், குழிச்சலை சேர்ந்த சுரேஷ், மேலத்தெருவை சேர்ந்த சிபுராஜ், வினு, ஜெஸ்சிலி, செல்வராஜ், ஜஸ்டின்ராஜ், ஆன்சியோ ஆகிய 12 பேர் மீதும் மற்றும் கண்டால் தெரியும் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே நேற்று கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க கோரியும், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் அருமனை பகுதியில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அருமனை சந்திப்பு, குஞ்சாலுவிளை, மேலத்தெரு, நெடுங்குளம் சந்திப்பு, நெடியசாலை, பனவிளை, தெற்றிவிளை, குழிச்சல் போன்ற பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், துணிக்கடை, நகைக்கடை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படும் மருந்துக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. மாலையில் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story