கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் பங்காருசாமி, மாவட்ட துணை தலைவர் திருப்பதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகள்
கோவில்பட்டி நகரசபையில் வீட்டு வரி, தொழில் வரி, கடை வாடகையை உயர்த்தியதை குறைக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அரசு ஆணைப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வாரம் இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும். இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழிப்பாதையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். தினசரி மார்க்கெட்டில் நடைபாதையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி பாண்டியன், சுப்புராயலு, பிரேம்குமார், வக்கீல் பிரிவு அய்யலுசாமி, நகர பொருளாளர் பிச்சைகனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story