ஆரோவில்லில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை


ஆரோவில்லில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஆரோவில்லில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இந்த நகரம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி பொன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார்.

இதையொட்டி விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் இதர பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, பிரதமர் பங்கேற்கும் விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தனபால், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் நேரு, துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story